வட மாகாணத்தில் ஏன் தேர்தல் நடத்தக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். வட மாகாணசபை தேர்தலை தடுத்து நிறுத்த வீடமைப்ப அமைச்சர் விமல் வீரவன்ச முயற்சி எடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.வட மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டாம் எனக் கூறுவதன் மூலம் அந்தப் பிரதேச மக்கள் மீளவும் வன்முறைகளில் ஈடுபடக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்ச ஏனைய மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தமது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றியும் ஈட்டியுள்ளதாகவும், தற்போது வட மாகாணசபைத் தேர்தல் அரசியல் சாசனத்திற்கு முரணானது எனத் தெரிவிப்பது அர்த்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக