திங்கள், 30 செப்டம்பர், 2013

தமிழீழம் உருவாக விடமாட்டேன்-விக்னேஸ்வரன்

'நாட்டைத் துண்டாடாமல் ஒரே நாட்டில் அதிகாரத்தைப் பகிர்ந்து முன்னேற்றுவதே எனது குறிக்கோளாகும். அதற்கு சகல மக்களும் ஒன்றுபட்டுழைக்க வேண்டும் என்று வட மாகாணத்தில் போட்டியிட்டு முதன்மை உறுப்பினராக அதிக விருப்புவாக்கு பெற்றுத் தெரிவாகியுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஏரிக்கரை பத்திரிகையான தினகரனுக்கு தெரிவித்துள்ளார். மேலும் எதிர் காலத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நேச மனப்பான்மையுடன் ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன். நாட்டைப் பிரித்தால் நான் ஒத்துழைக்க மாட்டேன். அதற்குத் துணைபோகவும் மாட்டேன். உதவிகளும் செய்யமாட்டேன்.
நாம் இச் சந்தர்ப்பத்தில் நாட்டை துண்டாட துணைபோகாமல் அதிகாரப் பகிர்வைச் செய்து நாட்டை முன்னேற்றிச் செல்லவே நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். அல்லாமல் நாட்டைத் துண்டாடி மீண்டும் பிரச்சினைகள் உருவாக்கிவிடுவது எமது நோக்கமுமல்ல. அது பற்றி நினைப்பதுமில்லை. இந்த நாட்டை துண்டாட நான் முதலமைச்சராக வரவில்லை. மாறாக ஒரே நாட்டில் அதாவது பிளவுபடாத நாட்டில் ஒரே அரசின் கீழ் ஆள்வதையே நான் விரும்புகிறேன் என்பதையும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். பிரிவுபடாத இலங்கைக்குள் தீர்வென்பது தமிழீழம் உருவாக நான் அங்கீகாரமோ ஆதரவோ அளிக்கமாட்டேன் என்பதையே அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக