ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிச் சென்று கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 புகலிடக் கோரிக்கையாளர்களையும் திருப்பி அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என அந்நாட்டு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி புகலிடத் தஞ்சம் கோரி 153 பேர் படகில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர். இவர்களின் நிலை என்னவென்று நீண்ட நாடகளாகத் தெரியாமல் இருந்த நிலையில் அவர்களை கைது செய்து தடுத்து கப்பலில் வைத்திருப்பதாக அந்நாட்டு அரசு நீதிமன்றில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர்களை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து இருந்தது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்று இடைக்காலத் தடை விதித்திருந்தது. கப்பலில் தடுத்து வைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இவற்றுக்கு எதிராக மெல்போர்ண் உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பப் போவதில்லை என அறிவித்துள்ளது.
NAARAIYOOR KUMARAN .COM நாரையூர் குமரன்.கொம்
தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
வெள்ளி, 18 ஜூலை, 2014
சனி, 5 ஜூலை, 2014
இலங்கையின் புகழ்பாடும் ஆஸி,பிரதமர் தர்க்கா நகர் வந்தால் தெரியும்-அசாத் சாலி!

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புகலிட கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று, அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது மற்றும் அந்த படகுக்கு என்ன நடந்து என்பது பற்றியும் கருத்து வெளியிட்ட அசாத் சாலி, அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கூறினார்.
அவுஸ்திரேலிய பிரதமர், இலங்கை அரசாங்கம் குறித்து புகழ்பாடி வருகிறார். இலங்கை அமைதியான சூழல் நிலவும் நாடு என்றும் கூறுகின்றார். அவர் தர்கா நகருக்கு வந்தால் நாட்டில் நிலவும் அமைதியான சூழலை காணமுடியும் எனவும் அசாத் சாலி சுட்டிக்காட்டினார்.
மேலும், மத விவகார பொலிஸ் பிரிவில் நான் 284 முறைப்பாடுகளை செய்தேன். அவற்றில் எந்த முறைப்பாடு குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை. பொசன் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் பொலிஸ் பிரிவை கலைக்க வேண்டும் என்று கூறிய இராவணா பலய தற்போது ஏன் அமைதியாக இருக்கின்றது எனவும் அவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
அளுத்கமவில் பொதுபல சேனா கூட்டத்தை நடத்துவதற்கு முதல் நாள் அந்த கூட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நான் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கேட்டுக்கொண்டேன். இந்த கோரிக்கை பற்றி அமைச்சர் டியூ.குணசேகரவும் பாராளுமன்றத்தில் கூறினார். இவை குறித்து கருத்துக்களை வெளியிடுவதால் அமைச்சர் ஹக்கீம் மற்றும் நான் அடிப்படைவாதிகள் என்றால் எங்களை கைது செய்யுங்கள். அமைச்சர்களும், செயலாளர்களும் கோகணக்கில் நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டார்.
வெள்ளி, 4 ஜூலை, 2014
புலிகள் இயக்க தலைவர்கள் என நம்பப்படும் நால்வர் மலேசியாவில் கைதாம்!

கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர் மற்றும் செலாங்குர் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்த தேடுதலை நடத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் குண்டு தொடர்பான நிபுணர் எனவும், இவரிடம் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அடையாள அட்டை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மற்றுமொரு விடுதலைப் புலி உறுப்பினர், முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மூன்றாம் சந்தேக நபர் அண்மையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரின் சகா எனத் தெரிவிக்கப்படுகிறது.
நான்காம் சந்தேகநபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் தகவல்களை திரட்டியவர் எனக் குறிப்பிடப்படுகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான கடவுச் சீட்டுக்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் கைது செய்யப்பட்ட 14 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களில் ஏழு பேருக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிறுவனத்தின் அடையாள அட்டைகள் இருப்பதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்படும் எனவும், கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
புதன், 2 ஜூலை, 2014
லண்டன் தீ விபத்தில் தமிழ் பெண் மரணம்!

வோத்தம்ஸ்ரோ, வூட்போர்ட், லெயிஸ்ரன் பகுதிகளில் இருந்து சென்ற தீயணப்புப் படை வீரர்கள் அதிகாலை 3.05 மணியவில் தீயைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாகவும் தீயிற்கான காரணம் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் 55 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளபோதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பற்றிய விபரங்களை காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
செவ்வாய், 1 ஜூலை, 2014
பிரேசிலை ஆதரிக்கும் ஆறு விரல்க்குடும்பம்!(படம்)
பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அதிசமாக ஒரு கையில் 6 விரல்கள் காணப்படுகின்றன.
த சில்வா எ குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பமே இவ்வாறு ஒரு கையில் 6 விரல்களுடன் இருக்கின்றனர். த சில்வா குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பிரேஸிலின் தலைநகரான பிரேஸிலியாவில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஒரே காலிலும் 6 விரல்கள் காணப்படுகின்றன.
தற்போது பிரேஸில் நடைபெறும் கால்பந்து உலக கிண்ணத்தில் தமது நாடு 6ஆவது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றி சம்பியனாகும் என தமது ஆதரவினை வெளியிட்டுள்ளனர் த சில்வா குடும்பம்.
'பிரேஸிலின் வெற்றிக்கு நாங்கள் அதிகமான சக்தியை வழங்குகின்றோம். இந்த சக்தி மைதானத்தில் பரவி அணி சிறப்பாக விளையாடி தங்களது 6ஆவது உலக கிண்ணத்தை வெற்றிபெறும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார் அனா கரோலினா சன்டா த சில்வா.
6 விரல்கள் காணப்படுகின்ற போதிலும் அன்றாட நடவடிக்கைகளில் எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்கிறது த சில்வா குடும்பம். மேலதிக கால் விரல்கள் விளையாட்டிலும் உதவியாக இருக்கும் என்கிறார்கள்.
பொலிடக்டைலி எனும் ஒரு அரிய வகை பரம்பரை கோளாறு காரணமாகவே இந்த 6 விரல்கள் தோன்றுகிறதாம்.
'6 விரல்கள் இயல்பானது என்றே எனது தந்தை கருதினார். எங்களைப் பொறுத்தளவில் 5 விரல்களை உடையவர்கள் அசாதாரணமானவர்கள்' என்கிறார் சில்வா குடும்பத்தின் மூதாட்டி.

புதன், 25 ஜூன், 2014
விஜித்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்!

வெள்ளி, 24 ஜனவரி, 2014
சிரச தொலைக்காட்சி மீதான தாக்குதலுக்காக தாம் மன்னிப்பு கோரத் தயார்!- அமைச்சர் மேர்வின்
சிரச தொலைக்காட்சி நிறுவனம் மீது தாக்குதல் நடத்தியமைக்காக வருந்துவதாகவும், அதற்காக தாம் மன்னிப்பு கோரத் தயார் எனவும் பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் இழைத்த மிகப் பெரிய தவறுகளில் சிரச தொலைக்காட்சி மீதான தாக்குதலும் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிரச தொலைக்காட்சி மீதான தாக்குதலுக்காக தாம் மன்னிப்பு கோரத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் மீண்டும் இழைக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு இலங்கையின் முக்கிய ஊடக நிறுவனமொன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வரும் அமைச்சர் மேர்வின் இந்தக் கருத்து குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சிரச தொலைக்காட்சி மீதான தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும், ஊடக அமைப்புக்களும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கைக்கு திடீர் விஜயம்!
அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இன்று மாலை இலங்கை வந்துள்ளார். அவர் பயணித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த அவுஸ்திரேலிய பிரதமரை, இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்ன விமான நிலையத்தில் வரவேற்றார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த அவுஸ்திரேலிய பிரதமரை, இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்ன விமான நிலையத்தில் வரவேற்றார்.
பிரதமர் டி.எம். ஜயரத்ன கம்பளையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது, காவி உடை அணிந்த பிக்கு ஒருவர் திருமணம் செய்த 5 பிள்ளைகளின் தந்தை என்ற தகவலை வெளியிட்டிருந்தார்.
பிரதமர் வெளியிட்ட தகவலின் படி அந்த பிக்கு ஜாதிக ஹெல உறுமயவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் என பிரதமரின் அலுவலகத்தின் உட்தரப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பிட்டியில் இருக்கும் ஒரு தேரருக்கு 5 பிள்ளைகள் இருப்பதாக பிரதமர் கூறியிருந்தார். இதனடிப்படையில் கம்பஹா மாவட்டம் சிங்கப்பிட்டியில் ரத்ன தேரரின் குடும்பம் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், மாலை நேரங்களில் தனது வீட்டுக்கு டெனிம் காற்சட்டை அணிந்து செல்வது வழக்கம் எனவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
பிரதமர் வெளியிட்ட இந்த தகவலின்படி அத்துரலியே ரத்ன தேரரின் விடயங்கள்

சனி, 14 டிசம்பர், 2013
மனைவியின் சகோதரியை கடத்திச் சென்று பலாத்காரம்!

புத்தளம் - கற்பிட்டி, நுரைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர் கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி தனது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றவேளை சிறுமியுடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னதாக தனது மனைவி மற்றும் அவரது பெற்றோர்களுக்கு தெரியாமல், சிறுமியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் சிறுமியின் பொற்றோரினால் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்ட நாளிலிருந்து தாம் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வைத்திய பரிசோதனைகளுக்காக சிறுமி கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)